Thursday, November 14, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜூலை முதல் மின் கட்டணம் குறைகிறது

ஜூலை முதல் மின் கட்டணம் குறைகிறது

இலங்கை மின்சார சபையினால் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணக் குறைப்பில் 0 முதல் 30 அலகு வகைக்கான கட்டணம் 26.9 வீதத்தால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மின் கட்டண திருத்தத்தில், ஒட்டுமொத்த கட்டணக் குறைப்பு 3 சதவீதம் மட்டுமே.

31 முதல் 60 அலகு வரையிலான மின் கட்டணம் 10.8 சதவீதமும், 61 முதல் 90 அலகு பிரிவினரின் மின் கட்டணம் 7.2 சதவீதமும், 91 முதல் 180 அலகு பிரிவினரின் மின் கட்டணம் 3.4 சதவீதமும் குறைக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

180க்கும் மேற்பட்ட மின் அலகுகளின் கட்டணம் 1.3 சதவீதத்தால் குறைக்கப்படும் என்று கூறிய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, மத ஸ்தலங்கள் மற்றும் அறநிலைய நிறுவனங்களின் மின்சாரக் கட்டணம் 3.2 சதவீதத்தால் மட்டுமே குறைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹோட்டல் தொழில்துறையின் மின்சாரக் கட்டணம் 12.6 வீதத்தால் குறைக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் கைத்தொழில், பொது பிரிவினர், தெருவிளக்குகள் மற்றும் அரச நிறுவனங்களின் கட்டணத்தில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles