Wednesday, November 13, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர் தொழிலாளர்கள் அதிகரிக்கும் சாத்தியம்

சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நிலைமையை கருத்திற்கொண்டு சிறுவர்கள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் அவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சட்டத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் வாழ்க்கை, உடல்நலம், கல்வி அல்லது தார்மீக வளர்ச்சிக்கு உகந்த வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்த முடியும் எனவும், மேலும் அந்த குழந்தைகளை பாதுகாப்பற்ற வேலைகளில் அமர்த்துவது சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பணம் சம்பாதிக்க விருப்பமில்லாமல் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் போக்கு காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles