Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உலகம்ஆந்திர ரயில் பாதைக்கு அருகில் இலங்கையரின் சடலம் மீட்பு

ஆந்திர ரயில் பாதைக்கு அருகில் இலங்கையரின் சடலம் மீட்பு

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடு ஒன்று இந்திய பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சுமார் நாற்பது நாட்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர பொலிஸ் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் கரவெட்டி வீரதேவன் மாவத்தையைச் சேர்ந்த அருணாசலம் சிவராசா என்பவரின் கடவுச்சீட்டு எலும்புக்கூட்க்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் இந்தியாவின் காசி கோயிலுக்குச் செல்வதாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதிய கடிதமும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஆந்திர பொலிஸார் இலங்கைக்கு தகவல் அளித்துள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகர் அலுவலகம் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles