Saturday, November 16, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லேரியா சிறுவன் மரணம்: கைதான பாட்டனாருக்கு பிணை

முல்லேரியா சிறுவன் மரணம்: கைதான பாட்டனாருக்கு பிணை

முல்லேரியாவில் 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, அவனது பாட்டனார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் பணியாளர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

51 வயதான குறித்த சந்தேகநபர் புதுக்கடை நீதவான் முன்னிலையில் நேற்று பிற்பகல் பிரசன்னப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புல் வெட்டும் இயந்திரத்தின் கத்திகள் தவறுதலாக சிறுவனைத் தாக்கியதால் சிறுவன் இறந்துவிட்டதையும் குறித்த சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சிறுவன் இறந்தமை காரணமாக, பீதியடைந்த நிலையில், தாம், உடைந்த கண்ணாடி போத்தல்களின் துண்டுகளை சிறுவனின் உடலின் அருகில் வைத்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று முல்லேரியா- ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்து ஐந்து வயதுடைய ஜொனாதன் மார்க் பொன்சேகாவின் என்ற சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று சந்தேகத்துக்குரிய புல்வெட்டும் பணியாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஜொனாதன் மார்க் பொன்சேகா என்ற ஐந்து வயது சிறுவன் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தமை தெரியவந்திருந்தது.

முன்னதாக காயங்களுக்கு காரணமாக கருதப்பட்ட உடைந்த கண்ணாடி போத்தல் துண்டுகள் சிறுவனின் உடலில் இருந்து நான்கு அடி தூரத்தில் கண்டெடுக்கப்பட்டன.

எனினும் அந்தத் துண்டுகளுக்கு அருகில் ரத்தக் கறைகள் எதுவும் காணப்படாததால், சந்தேகம் எழவே, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போதே புல்வெட்டும் இயந்திரத்தின் கத்திகள் தவறுதலாக தாக்கியதால் மரணம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியை இன்று பிற்பகல் தலாஹேன மயானத்தில் இடம்பெறுமென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles