Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உலகம்300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், 300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த நிலையில், மீட்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில், 300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி வீழ்ந்தது.

தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் இராணுவத்தினர், பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது.

இரவு, பகலாக மீட்புப் பணிகள் தொடர்ந்த நிலையில், சுமார் 55 மணிநேர போராட்டத்திற்கு பின் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மீட்கப்பட்ட குழந்தை அங்கிருந்த நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள், குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles