Saturday, August 2, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் பூசகர் உயிரிழப்பு

ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் பூசகர் உயிரிழப்பு

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வீட்டுக்கு அருகாமையில் உள்ள பழைய வீடு ஒன்றில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஏற்கனவே ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து விடுதலையாகி சில மாதங்கள் குறித்த போதைபொருள் பாவனையில் இருந்து விலகிய நிலையில் மீண்டும்அதனை ஊசி மூலம் செலுத்திய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles