Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்மார்ட் மின்சார மீட்டர்களை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை

ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை

இலங்கையில் 3 கட்ட மற்றும் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் உற்பத்தி இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் லங்கா மின்சார நிறுவனம் (LECO) ஆகியவற்றிற்கு தேவையான ஒற்றை கட்ட மீட்டர்கள் இலங்கையில் ANTE LECO Metering Company மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

LECO இன் துணை நிறுவனமான Ante LECO Metering Company (Pvt) Ltd. வருடாந்தம் 250,000 மீட்டர்களை உற்பத்தி செய்கிறது.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், நிறுவனம் இந்த ஆண்டு 3-பேஸ் மற்றும் ஸ்மார்ட் மின்சார மீட்டர் உற்பத்தியை விரிவுபடுத்தும் என தெரிவித்துள்ளார்.

“விரிவாக்கத்துடன், நிறுவனம் ஒற்றை-கட்டம், 3-கட்டம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களுக்கான முழு உள்நாட்டு தேவையையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் எதிர்காலத்தில் ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்டு செயற்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அன்டெ மீட்டர் குழுமத்தின் தலைவர் மற்றும் LECO மற்றும் ANTE LECO அளவீட்டு நிறுவனத்தின் அதிகாரிகளை நேற்று சந்தித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அவற்றின் புதிய மீட்டர்களை அறிமுகப்படுத்துவது குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles