இந்த வார இறுதியில் பாடசாலைகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலை நிர்வாகங்களின் ஆதரவுடன், பாடசாலைகளுக்கு அருகாமையில் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொழும்பு மாநகர சபை அதிகாரிகளின் பங்களிப்புடன் கொழும்பு நகர எல்லைக்குள் விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த வருடத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.