Wednesday, July 23, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவழிதவறி நின்ற யுவதியை துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது

வழிதவறி நின்ற யுவதியை துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது

நேர்முகப் பரீட்சைக்காகச் செல்லும் போது வழிதவறிச் சென்ற யுவதியை துஷ்பிரயோகம் செய்த இரு இளைஞர்களை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி குறித்த யுவதி வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் நிறுவனமொன்றில் நேர்காணலுக்காக வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அந்த நிறுவனத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர் சாலையோரத்தில் இருந்துள்ளார்.

அப்போது, ​​முச்சக்கர வண்டியில் வந்த இரு இளைஞர்கள், தாங்கள் உதவுவதாக கூறி, அம்பேபுஸ்ஸ பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் உள்ள காவலர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று யுவதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (09) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles