பெண்களின் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பாதரசம் கலந்திருப்பதாக ஆய்வக அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
பெட்டாவில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்குக் கிடைத்த க்ரீம் வகைகள் தொடர்பில் ஆய்வு செய்த பேதே இந்த விடயம் அம்பலமானது.
இவ்வாறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படக் கூடும் என்பதால், இவ்வாறான தரமற்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்புப் பிரிவினர் அண்மையில் பெட்டா பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் குறிப்பிடப்பட்ட உத்தரவாதம் இல்லாத, தரமற்ற மற்றும் சட்டவிரோதமாக பொதி செய்யப்பட்ட பல வகையான அழகுசாதனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன் தரத்தை பரிசோதிப்பதற்காக 6 வகையான பூச்சுகளின் மாதிரிகள் இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த க்ரீம்களில் அதிக அளவு பாதரசம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.