வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து இரகசிய உத்தரவை, அந்நாட்டு ஜனாதிபதி கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தென் கொரியாவின் உளவு அமைப்பு தெரிவிக்கையில்,
வடகொரியாவில் நாளுக்கு நாள் மக்களிடம் கஷ்டம் அதிகரித்து வருகின்றது. மோசமான பொருளாதார சூழல் காரணமாக வட கொரியாவில் தற்கொலைகள் 40 % அதிகரித்துள்ளது.
வட கொரியாவின் கோங்ஜின் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு வட கொரியாவில் பட்டினிச் சாவுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளில் வட கொரியா இறங்கியுள்ளது.
தற்கொலையை சோசலிசத்திற்கு எதிரான தேசத் துரோகம் என்று தெரிவிக்கும் கிம், அதனைத் தடுக்க இரகசிய உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார்.