Saturday, August 2, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு ஒவ்வாமையால் பெண் பலி - மூவர் வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமையால் பெண் பலி – மூவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையால் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் எனைய 3 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles