அரச முகாமைத்துவ சேவையில் சுமார் 7000 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களில் பணிபுரிவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அரச மற்றும் மாகாண அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 5000 வெற்றிடங்கள் மத்திய அரச நிறுவனங்களிலும் எஞ்சிய 2000 இடங்கள் மாகாண அரச நிறுவனங்களிலும் உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அமில பண்டார தெரிவித்தார்.