இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள 618 எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் பேண வேண்டிய குறைந்தபட்ச எரிபொருள் இறுப்பை குறித்த எரிபொருள் நிலையங்கள் பேணி இருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
நாட்டில் உள்ள இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 1050 எரிபொருள் நிலையங்களில், 432 நிலையங்கள் மட்டுமே குறைந்த பட்ச எரிபொருள் இறுப்பை பேணிவந்துள்ளன.
ஏனையவற்றில் 255 நிலையங்கள் எந்தவகையான எரிபொருளின் இறுப்பையும் பேணவில்லை என்பதோடு, 363 நிலையங்கள் ஒரு வகையான எரிபொருளை மட்டுமே குறைந்தபட்ச அளவிலேனும் பேணியுள்ளன.
இந்த நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகயை எடுக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.