ஐம்பத்தைந்து வயது காதலியிடமிருந்து தங்கத்தை திருடிய இருபத்தெட்டு வயது காதலனை களனி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராக பணிபுரியும் சந்தேக நபர், குறித்த பெண்ணுடன் பல வருடங்களாக தொடர்பு வைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாரானதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், தங்கப் பொருட்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.