முச்சக்கரவண்டி விபத்தில் அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் அளுத்கம தர்காவைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டி நேற்று (07) இரவு 9.15 மணியளவில் அளுத்கமயிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மரக் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் அதே திசையில் சென்ற சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான சைக்கிள் ஓட்டுநர் பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சடலம் பேருவளை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.