சமையல் எரிவாயுவின் விலை பாரியளவில் குறைக்கப்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்கப் போவதில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை குறைக்கப்பட்ட போதிலும், கிட்டத்தட்ட 75 வீதமான பேக்கரிகள் டீசல், விறகு அல்லது மின்சாரத்தை தமது செயற்பாடுகளில் பயன்படுத்துவதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எனவே பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கோதுமை மா, மாஜரின் , ஈஸ்ட் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில், பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.