Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு

பரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு

வத்தேகம மகளிர் பாடசாலையின் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் கண்காணிப்பாளராக கடமையாற்றிய ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இவர் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் திடீரென சுகவீனமடைந்து வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரான 48 வயதுடைய கே. ஜே. சில்வா என்பவரே உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆசிரியர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles