Monday, December 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுநான் குற்றமற்றவர் - தனுஷ்க குணதிலக்க

நான் குற்றமற்றவர் – தனுஷ்க குணதிலக்க

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தான் குற்றமற்றவர் என இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக சிட்னி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

தனுஷ்க எந்த வகையிலும் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தால் அவருக்கு விரைவில் தண்டனை கிடைத்திருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தனுஷ்க குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் போது, ​​சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்ட இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக இலங்கை வீரருக்கு எதிராக முதலில் 04 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த வழக்கில் அவுஸ்திரேலிய புலனாய்வு திணைக்களம் அதிலிருந்து 03 குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுத்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles