Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிருமண ஆசை காட்டி மோசடி செய்த கான்ஸ்டபிள் கைது

திருமண ஆசை காட்டி மோசடி செய்த கான்ஸ்டபிள் கைது

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் திருமணமானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2019 ஆம் ஆண்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் பொலிஸ் கான்ஸ்டபிளும் காதல் உறவில் ஈடுபட்டதாகவும், அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பணத்தை பெற்றுக் கொண்டு கான்ஸ்டபிளை ஏமாற்றியதாக வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles