பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (7) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை செல்லுபடியற்றதாக்குமாறு குறித்த வைத்தியசாலை மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது.
இந்த மனு தொடர்பான விவகாரங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் உள்ளிட்ட நீதியரசர்கள் ஆயத்தினால் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளையடுத்து, மேற்படி தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டிருந்தார்.