இலங்கை கடந்த வருடம் (2022) 13.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இறக்குமதியை கட்டுப்படுத்தியதன் மூலம் இந்நாட்டின் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை காண முடிந்தது என்றார
கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் தலையீட்டின் ஊடாக கடன் வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஏற்கனவே திட்ட அறிக்கைகளை வழங்காத தொழிலதிபர்களுக்கு வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் வசதிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.