Saturday, February 14, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

இன்று (08) நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 40-45 கிலோமீற்றர் வேகத்தில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles