கொழும்பின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் மற்றும் 12 பேருக்கு இன்று (7) கோட்டை, நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை, கொம்பனித் தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே நீதிமன்ற இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இதன்படி, அலரிமாளிகை, ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் சுற்றுவட்ட பகுதி, உயர் பாதுகாப்பு வலயங்களை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் அணி வகுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று நண்பகல் 12:00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒன்றுகூடி தமது எதிர்ப்புப் பேரணியை ஆரம்பிக்கவுள்ளதாக IUSF அறிவித்துள்ளது.