குருணாகல் பொலிஸ் நிலையத்தில் குற்ற விசாரணை பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் புதையல் தோண்டச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரி நேற்று (6) குருணாகல் – வெல்லவ பிரதேசத்தில் புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போதே வெல்லவ குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
சந்தேகநபர் குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.