உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இலத்திரனியல் ஊடக நிறுவன பிரதிநிதிகளின் கருத்துகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இதற்கான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு நாடளாவிய ரீதியில் அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து இலத்திரனியல் ஊடக நிறுவன பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்