முறையான விலை நிர்ணயம் செய்யப்படாவிட்டால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கால்நடை உற்பத்தித் திணைக்களம் முழுமையாக தலையிடாவிட்டால், கோழிப்பண்ணைகள் நாட்டிலிருந்து இல்லாதொழிக்கப்படும் என ஒன்றியத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார்.
தோலுடன் கூடிய கோழி இறைச்சி 950 முதல் 1150 ரூபா வரையிலும், தோல் இல்லாத கோழி இறைச்சி 1150 ரூபா முதல் 1200 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாகவும், ஆனால் வியாபாரிகள் ஒரு கிலோ கோழி இறைச்சியை சுமார் 1600 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.