காலி முகத்திடல் கோட்டகோகம போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை ஜூலை 19ஆம் திகதி மீளப்பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், குறித்த சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதுடன், வழக்கை பிற்பகலில் அழைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி கோரியுள்ளார்.
இதன்படி, குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் 19ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.