தெமட்டகொட – காலிபுலவத்தை பகுதியில் பெண் ஒருவர் கால்வாயொன்றில் விழுந்து நேற்று (6) உயிரிழந்துள்ளார்.
கால்வாய்க்கு அருகாமையில் உள்ள மரத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த போதே 74 வயதான குறித்த பெண் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெமட்டகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.