உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் பிற்போட்டால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது ஏற்புடையதல்ல எனவும் முடிந்தால் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையேல் மாகாணசபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் வெள்ளை யானைகளை வைத்திருப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் கூறினார்.
