அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான போரில் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இணைந்துள்ளார்.
64 வயதான அவர், டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது அமெரிக்காவின் 48வது துணை ஜனாதிபதியாக பணியாற்றினார்.
இதற்காக அவர் உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வேட்புமனு தொடர்பில் அறிவிக்க உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக 7 பேர் போட்டியிடுகின்றனர்.