கொழும்பு கொம்பனி வீதி யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8 வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சீன பிரஜை அந்தக் கட்டிட நிர்மாணத்தில் பொறியியலாளராக பணியாற்றிய 24 வயதான இளைஞராவார்.
நேற்று (04) மாலை கட்டுமானப் பணிகளைக் கவனிக்கும் போது 8 ஆவது மாடியிலிருந்து அவர் விழுந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.