வாகனம் வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட திலினி பிரியமாலி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும், அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, வழக்கை ஆகஸ்ட் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.