பிணை நிபந்தனைகளை மீறியமை தொடர்பில் எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் கல்வெவ சிறி தம்ம தேரருக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (05) அழைப்பாணை விடுத்துள்ளார்.
பிணை நிபந்தனையின் பிரகாரம் தனது பிரிவில் ஆஜராகாத சந்தேகநபருக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஆளுநரின் பணிப்புரைக்கமைய பிணையில் விடுவிக்கப்பட்ட சிறிதம்ம தேரர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அவரது பிரிவில் ஆஜராக வேண்டும் என பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்திருந்த போதிலும் சந்தேகநபர் ஆஜராகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.