உலகளாவிய ரீதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தந்திரிமலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. அரச செலவினங்கள் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றது.
நாட்டில் தற்போது பொருளாதாரம் மீண்டெழுந்து வருகின்றது. இந்தநிலையில் எதிர்காலங்களில், உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டுக்கு செல்லும் போது, இதனை விடவும் அதிகளவில், வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். அதற்காக நாம் வரங்களையும் கடப்பாடுளையும் கொண்டிருக்க வேண்டும் என நிதி இராஜங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.