Monday, November 18, 2024
25.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉத்தியோகப்பூர்வ அரச வீட்டுக்கு குடிபெயர்ந்தார் கோட்டாபய

உத்தியோகப்பூர்வ அரச வீட்டுக்கு குடிபெயர்ந்தார் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகப்பூர்வ அரச வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

முன்னர் அது, அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டது.

இந்த வீடு, பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதியின் உத்தியோகப்பூர்வ இல்லங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

முன்னதாக இந்த வீட்டை விடுவிப்பதற்கு, அரசாங்கத்தின் தலைவர்கள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் பேச வேண்டியிருந்தது.

ஏனெனில் அந்த வீடு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் அவருக்கு, கொழும்பு மலலசேகர மாவத்தையில் வீடு வழங்கப்பட்டது.

எனினும் அங்கு அதிகமான சத்தம் இருப்பதாக கூறி அவர் புதிய வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, தாம் பதவி வகித்த போது, பெற்றுக்கொண்ட அதே அளவு எண்ணிக்கையான பாதுகாப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார்.

இதன்படி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரின் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles