Sunday, November 17, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு50 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இராணுவ வீரருக்கு பாராட்டு

50 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இராணுவ வீரருக்கு பாராட்டு

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த 50 இற்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றி பாரிய விபத்தை தடுத்தமைக்காக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் பாராட்டும் நிகழவு இடம்பெற்றது.

இலங்கையின் நான்காவது காலாட்படையின் கோப்ரல் கேஎம்பிஆர்கேஎல் கருணாரத்ன என்ற இராணுவ வீரரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் ஆலோசனையின் பேரில், குறித்த வீரர் நேற்று (01) இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, அவரது துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டி இராணுவத் தளபதியின் பாராட்டுச் சின்னம் அவருக்கு வழங்கப்பட்டது.

பேருந்து ஒன்று உடுதும்பர பிரதேசத்தில் இருந்து பயணித்த போது, ​​வலைவில் திரும்பும் போது சாரதியின் ஆசனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில், குறித்த பேருந்து சாரதியின்றி சுமார் 50 மீற்றர் தூரம் பயணித்துள்ளது.

சம்பவத்தை பார்த்த பேருந்தில் பயணித்த குறித்த இராணுவ கோப்ரல் துரிதமாக செயற்பட்டு சாரதி இருக்கைக்கு சென்று பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles