நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையிலான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது 200 வருடங்களாக இந்த நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்த பெருந்தோட்ட மலையக மக்களின் காணி உரிமை, சுகாதாரம், பாதுகாப்பு, பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற முகாமைத்துவம், சமூர்த்தி, நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பல பெருந்தோட்ட நிலங்கள் காடுகளாக மாற்றப்பட்டுள்ளமை, பெருந்தோட்ட தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.