இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குறைந்தபட்சம் 50 மின்சார பேருந:துகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திடமிருந்து 50 சதவீத மானியத்தை வழங்குமாறு கோரியதாகவும், பேருந்துகளுக்கான மீதித் தொகையை முதலீடு செய்வதாக உறுதியளித்ததாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
புவியியல் சூழ்நிலையைக் கருத்திற்க் கொண்டு, கொழும்பு, அதன் புறநகர்ப் பகுதிகள் மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் மின்சார பேருந்து சேவையை முதற்கட்டமாக தொடங்குவதற்கு சங்கம் முன்மொழிந்தது.
இந்த மின்சார பேருந்துகளை மலைநாடு மற்றும் அடிக்கடி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இயக்க முடியாது.
இந்த பேருந்துகளில் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை பொருத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.