கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் நேற்று (01) கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை அனுராதபுர சந்தியில் இருந்து முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சா பொதியை ஏற்றிக்கொண்டு செல்லும்போது 96 ஆம் கட்டை பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்திடம் ஒரு கிலோ பத்து கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.