Friday, March 27, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐஸ் கடத்திய இந்தியர் உட்பட எண்மர் கைது

ஐஸ் கடத்திய இந்தியர் உட்பட எண்மர் கைது

நாட்டிற்கு ஐஸ் போதைப் பொருளை கடத்திய இந்தியர் ஒருவர் உள்ளிட்ட எண்மர் கல்பிட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்பிட்டியிலிருந்து அக்கறைப்பற்று பகுதிக்கு ஐஸ் போதை பொருளை கடத்திய ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் இந்தியர்கள் உள்ளிட்ட எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து புடவைகளை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் இந்தியரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles