எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் இலங்கைக் கடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உதவுவதற்கு இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொனால்ட் பெரேரா மற்றும் சாந்தக ஜயசுந்தர ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அசேல ரேகவ தெரிவித்துள்ளார்.
இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, தமது ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.