Tuesday, November 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுப்ரூனோ திவாகரவுக்கு விளக்கமறியில்

ப்ரூனோ திவாகரவுக்கு விளக்கமறியில்

நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ப்ரூனோ திவாகரவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவுக்கு உதவியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles