பாணந்துறை – வேகடை பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 23 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த நபரை தாக்க முற்பட்ட போது, அவர் தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்கு ஓடியுள்ளதுடன், அவரை துரத்தி சென்று சந்தேக நபர் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.