சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணைக்கப்பாடுகள் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற கைதிகள் தொடர்பாக தீவிர கவனத்தை செலுத்த வேண்டியுள்ளதாக மாற்றுக் கொள்கைக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை கைவிடுமாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அறிக்கை மூலம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
நடாஷா எதிரிசூரிய இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையானது மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதாகக் கூறி கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கான முயற்சி என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே பல சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையிலேயே மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளதெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.