தமிழ்நாட்டின் மண்டபம் கடற்கரையில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இரு இலங்கையர்கள் தமிழக கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 8 கிலோ என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தங்கம் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மண்டபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.