இவ்வருடம் சுமார் 60 கால்நடை வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே அதிகளவு பால் உற்பத்தி செய்யும் நுவரெலியா மாவட்டத்தில் 6 பிரிவுகளுக்கு கால்நடை வைத்தியர்கள் இல்லை என சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
வனஜீவராசிகள் மற்றும் விலங்கியல் பூங்கா திணைக்களத்தில் கால்நடை வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.