டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது மருந்துகளின் விலையை மிக விரைவாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று (29) அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, டொலரின் பெறுமதி குறைவுடன் ஒப்பிடும் போது மருந்துகளின் விலை 15மூ குறைய வேண்டுமென அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சு, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு, அரச மருந்துக் கூட்டுத்தாபனம், மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
மருந்தின் விலை 190.00 ரூபா முதல் 370.00 ரூபா வரையில் பாரியளவில் அதிகரித்துள்ள போதிலும் டொலருடன் ஒப்பிடுகையில் மருந்துகளின் விலை குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.