22 வருடங்களுக்கு முன்னர் தனது 13 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் 45 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
63 வயதுடைய நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும் நீதிமன்றுக்கு 30,000 ரூபா தண்டப்பணம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் சந்தேகநபருக்கு உத்தரவிட்டுள்ளது.