Sunday, September 14, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூதாட்டத்துக்காக மகளை விற்ற தந்தை கைது

சூதாட்டத்துக்காக மகளை விற்ற தந்தை கைது

அகலவத்த பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் தன்னுடைய மனைவியையும் இணைத்துக்கொண்டு வீட்டில் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக, வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக, தன்னுடைய மகளையே விற்ற தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்குச் செல்லும் 16 வயதான மகளே இவ்வாறு விற்கப்பட்டுள்ளதாக அகலவத்த பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

கலவானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளிஇ அச்சிறுமியை ஒருவருடமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

வட்டிக்கு பணம் கொடுக்கும் குறித்த முதலாளி, சிறுமிக்கு தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ள நிலையில் அந்த தொலைபேசி சின்னமாவின் கைகளுக்கு சிக்கியதை அடுத்தே இந்தக் குற்றச்செயல் அம்பலமானது.

அந்த சிறுமிஇ தன்னுடைய மாமாவினால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சந்தேகநபரான தந்தை, நேற்று செவ்வாய்க்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியும் மாமாவும் பிரதேசத்தில் இருந்து தப்பியோடிவிட்டனர்.

குறித்த சிறுமியின் பெற்றோர் தமது வீட்டுக்குள்ளேயே பல வருடங்களாக சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூதாட்டத்துக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியான கலவானையைச் சேர்ந்த 38 வயதானவர்இ அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான தந்தை, சூதாடுவதற்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியிடம் பெற்ற பணத்துக்காக தன்னுடைய மகளையே பாலியல் செயற்பாட்டுக்காக வட்டி முதலாளியிடம் அனுப்பிவைத்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles